செய்தி: சட்டவிரோத குருசடியின் மின் இணைப்பைத் துண்டிக்க நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையை ரத்து செய்ய நடவடிக்கை! “நடப்பது என்ன?” குழுமத்திடம் மின் வாரியம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை சிரைச்சோலையாக மாறிய அற்புதத்துக்கு பின்னால் இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை posted bymackie noohuthambi (kayalpatnam )[19 July 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45675
ஒரு பெரிய கோடு. அதை கையைக்கொண்டு தொடாமல் அழிக்காமல் எந்தவித rubber , eraser pencil துணை இல்லாமல் எப்படி சிறிய கோடாக மாற்றுவீர்கள். கேள்வி என்னவோ கஷ்டமானதுதான். ஆனால் சற்று குறுக்கு வழியில் சிந்திப்பவர்களுக்கு உடனடியாக விடை தெரிந்து விடும். அது அவர்களது வல்லமை கெட்டி தனம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பெரிய விஷயம் அல்ல. பக்கத்தில் உங்கள் எழுதுகோலால் இப்போது இருக்கும் கோட்டுக்கு அருகில் அதை விட ஒரு பெரிய கோட்டை போடுங்கள். ஏற்கெனவே இருக்கும் கோடு ஆட்டோமேட்டிக்காக சிறிய கோடாக ஆகிவிடும்.
இதற்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கும் என்ன சம்பந்தம். இதற்கும்ஜெ குருசடி கட்டடம் மின் இணைப்புக்கு என்ன சம்பந்தம் ஜெயலலிதா அவர்கள் அந்த சிறைச்சாலையில் அனுபவித்த இன்பங்கள் அப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை.இப்போது சசிகலா காலத்தில் ரூபா என்பவர்கள் மூலம் வெளிவந்திருக்கிறது அவ்வளவுதான். சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறை சாலையை சிறை சோலையாக மாற்றுவது சசிகலாவுக்கு மட்டும் சொந்தமில்லை,அது ஒரு சாதனையும் இல்லை. லஞ்சம் கொடுத்தால் ஒரு ஊரிலேயே சொகுசு ஹோட்டல்களில் தங்கவைத்து சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி ஒரு முதலமைச்சராக இந்த நாட்டிலே வளமுடன் வலம் வர முடியும் இந்த நாட்டின் பிரதமரும் அவருடைய உதவியை நாடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நிலைக்கு உயர முடியும் என்ற உண்மைகள் நாளிதழ்களை படிப்பவர்களுக்கு தெரியும். ஓர் தெரு ஓரத்தில் பீடி புகைத்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானிய மனிதனுக்கும் அது தெரியும்.
எனவே லஞ்சம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்ற உண்மைக்கு மாற்றமாக இந்த நாட்டில் எதையும் செய்ய முடியாது. ஒரு வேளை அப்படி செய்ய முயற்சிப்பவர்களை குண்டர் சட்டத்தில் தண்டிக்கவும் செய்வார்கள் ...வளர்மதி என்ற பெண் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்ட செய்தி ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
என்றாலும் துணிச்சல் மிகுந்தவர்கள் இந்த நாட்டில் இல்லாமலும் இல்லை...சகாயம் போல...நீதிபதி டீ குன்ஹா போல...இப்போது ரூபா போல...இன்னும் வரவே செய்வார்கள்.
EVERY ACTION HAS AN EQUAL AND OPPOSITE REACTION ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross