காயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு, சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பைத் துண்டிக்க நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் கேள்விக்கு, தமிழ்நாடு மின் வாரியத்தின் காயல்பட்டினம் இளநிலை பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் பூங்காவிற்கு வடக்கே, சட்டத்திற்குப் புறம்பாக, அரசு புறம்போக்கு நிலத்தில் குருசடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குருசடிக்கு, விதிமுறைகளை மீறி தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பும் வழங்கியுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக கடந்த மார்ச் மாதம் மனு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றம், அரசாணைகள், மின்வாரிய சுற்றறிக்கைகள் தெரிவித்துள்ள வழிமுறைகளுக்கு மாற்றமாக வழங்கப்பட்டுள்ள மின்னிணைப்பைத் துண்டிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, மின்னிணைப்பு பெற்றவருக்கு மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. முதல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவுக்குள் மின்னிணைப்பு பெற்றவர்கள் - உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
அதனடிப்படையில் அந்த மின் இணைப்பை மின் வாரியம் உடனடியாகத் துண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், இரு முறை கால அவகாசத்தை நீட்டித்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட மின்னிணைப்பை பெற்றவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் - மின்னிணைப்பைத் துண்டிக்க, இடைக்காலத் தடையை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பெற்றனர்.
இது தொடர்பான வழக்கு, மின்வாரியத்தின் முறைமன்றத்தில் மே 11 அன்று விசாரணைக்கு வந்தது. அவ்வேளையில், *நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - மின்வாரிய அதிகாரிகளின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கும், தவறுக்கு உடந்தையாக இருந்த செயலுக்கும் கடுமையான கண்டனம் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, மின்வாரியத்தின் காயல்பட்டினம் கிளை இளநிலை பொறியாளர் திரு. முருகனுக்கு, வழக்கறிஞர் மூலம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கு தற்போது பதில் வழங்கியுள்ள அவர், *நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அவரது கடிதம் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
“நடப்பது என்ன?” சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 17, 2017; 9:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|