காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) கடற்கரையோரத்தில் புதிய சாலை, மின் வினியோகம், கழிப்பறை வசதிகள் செய்து தந்தமைக்காக, அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பயிற்சிகள் கிராம பேரிடர் மேலாண்மை அணி உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அடிப்படையில் சென்னை மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் திரு. பால் பேட்ரிக் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 21 கடற்கரை ஒர கிராமங்களில், செயல்படும் கிராம பேரிடர் மேலாண்மை அணி உறுப்பினர்களுக்கான பயிற்சி மாதந்தோறும் நடைபெறுகிறது.
இந்த மாதம் நடைபெற்ற பயிற்சியினை பழையகாயல், இரட்சண்யபுரம், சிங்கிதுறை மற்றும் பெரியதாழை கிராமங்களில் ஆய்வு செய்தார். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பொழுது தன்னை காத்துக்கொண்டு பிறரை காப்பாற்றி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு (1. முன்னெச்சரிக்கை அணி, 2. இடம் பெயர்தல் அணி 3. புயல் பாதுகாப்பு பாரமரிப்பு அணி 4. தேடுதல் மற்றும் மீட்பு அணி 5. முதலுதவி அணி என) 5 வகை அணி உறுப்பினர்களும், முதன்மை பொறுப்பாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஆய்வின் போது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் கடற்கரையேர கிராம மக்கள் தங்களது பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் வேண்டுமென (VDRMP) கிராம பேரிடர் அபாய மேலாண்மை திட்டம் தயாரிக்கும்போது கோரிக்கை வைத்தார்கள். அதனடிப்படையில் CBDRM திட்டத்தின் வாயிலாக சிங்கிதுறை கிராமத்திற்கு கடற்கரை ஓரத்தில் சாலை, மின் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கிதுறை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தந்தமைக்காக அப்பகுதி கிராம மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பல்நோக்கு புகலிட மையத்தை கொம்புதுறை கிராமத்திலும், திருச்செந்தூரிலும் திட்ட ஆலோசகர் திரு.பால் பேட்ரிக் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் CBDRM வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.எஸ்.விஜயா, கிராம ஒருங்கிணைப்பாளர்கள்; திருமதி. டீ.ஹெல்பா, திரு.கே.மகாபாரதன், திருமதி.P.குட்டியம்மாள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|