தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் தலைமையில் - உணவுப் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள சிப்பி கூட்டத்தில் 20.07.2017. வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கு வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு கடைகள், சாலையேர சிற்றுண்டி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை அவற்றிக்கான உரிய பதிவு மற்றும் உரிமங்கள் பதிவு காலாவதியாகமல் நடப்பில் இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து உரிய பதிவு செய்வதில் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும். பாதுகாப்பு மற்றும் தரமான உணவு வழங்குவதற்கு பதிவு, உரிமம் பெறுவதற்கு தற்போது எளிமையான நடைமுறைகள் இணையதளம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு காலாவதியான பொருட்களை அனைத்து வகையான வியாபார நிறுவன உரிமையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. உணவுப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் அறைகள் விதிகளுக்குட்பட்டு ஆரோக்கியமான அடிப்படையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 40 மில்லி மைக்கிரன்க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும். வியாபார நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிறு வணிகக் கடைகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழைவு வாயிலில் குப்பை தொட்டி அவசியம் வைக்கப்பட வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உணவுக்கான உப்பில் குறிப்பிட்ட அளவில் அயோடின் கலந்து இருக்கவேண்டும். போலி உப்பு தொழிற்சாலைகளை கண்டறிந்து அதன் உரிமங்கள் ரத்து செய்ய கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நமது மாவட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கையினை மிகவும் பாதித்து அவர்களது வாழ்வினை சீர்குலைக்கும் பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவை சாலையேர கடைகள் மற்றும் சிறு, சிறு கடைகள் போன்ற கடைகளில் யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் அப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். சேமிப்பு கிட்டங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் புகையிலை பொருட்கள் கண்டறிந்தால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படும்.
இறைச்சிக் கழிவுகளை கழிவு ஓடைகளில் விசுவதால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன. இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் இறைச்சி கழிவுகளைத் தனித்தனியாக சேகரித்து, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, அதற்காக ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் கொட்டி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இக்கூட்டத்தில் உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|