மத்திய – மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவிகள் குறித்து - மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் விளம்பரப்படுத்துமாறு, தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில, மத்திய அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும்; சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை (ம) இயக்குநர், டாம்கோ மேலாண்மை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சங்கு கூட்டத்தில் 21.07.2017. அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் முனைவர் மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்;துகின்ற வகையில் கல்வி உதவித்தொகைகள், தொழில் துவங்குவதற்கான கடன் உதவிகள், தொழில் பயிற்சிகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நமது மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பலன்களை, சிறுபான்மையினர்கள் பெற்று பயன்பெறுவதற்கு கிறிஸ்துவ தேவாலயங்களிலும், மசூதிகளிலும், அதிக அளவில் விளம்பர பதாகைகள் வைத்து விளம்பரப்படுத்தவேண்டும்.
சிறுபான்மையின சுய உதவி குழுக்களுக்கு குழு கடன்களாக ரூ.30 இலட்சம் வரை கடன் உதவிகள், 6 சதவீத குறைந்த வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் கடனாக 3 சதவீத குறைந்த வட்டியுடன் 5 வருடங்கள் வரை திரும்ப செலுத்துவதற்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்கள் தொழில் துவங்குவதற்கு படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு தேவையான தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான தொழில் துவங்குவதற்கு கடன் உதவிகளும், குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்காக போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒருமுறை விண்ணப்பித்து பிரிமெட்ரிக் உதவித்தொகையை 10-ம் வகுப்பு வரை தொடர்ந்து வழங்கப்படும்.
10-ம் வகுப்பு முடிந்து 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்க ஆதார் அட்டை, புகைப்படம், சாதி சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கவேண்டும்.
இக்கல்வி உதவித்தொகை 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு வாழ்க்கை தொழில்கள், ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், ஆசிரியர் பட்டயபயிற்சி, செவிலியர் பயிற்சி, இளங்கலை படிப்பு, முதுகலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, (தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் இடம்பெறாத பாடப்பிரிவுகள்) பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்வி பெறுவதற்காக நிபந்தனைகள் மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் தொகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு மதவாரியாக ஒதுக்கீடு மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிறப்பிடமாக கொண்டு இந்திய நாட்டில் பிற மாநிலத்தில் எந்த பள்ளியிலும் படித்தாலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குடும்பத்தை சோ;ந்த இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகையினை புதியதாகவும், புதுப்பித்து பெறவும்; www.scholerships.gov.in என்ற இணையதள முகவரிக்கு மட்டுமே விண்ணப்பக்கவேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
மத்திய, மாநில அரசுகள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் கல்வி வாய்ப்பினை அதிகரிக்கவும், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் சம பங்கினை உறுதிசெய்யவும், சிறுபான்மையினர் வாழ்வினை மேம்படுத்தவும், டாம்கோ மூலம் கடன் வழங்குதல் 2017-18-ம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை வழங்குதல், தூத்துக்குடி மாவட்டத்தில் 25 சதவீதம் சிறுபான்மையினர் வசிக்கும் கிராம பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் பல்நோக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துதல், மௌளானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்வி கடன்கள், தொடர்பான திட்டங்கள் மற்றும் பாரத பிரதமர் அவர்களின் 15 புதிய அம்சங்கள் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டங்களில் செயல்படுத்துவதை கண்காணிக்க மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 10-ம் வகுப்பு படித்துவரும் பெண்களுக்கு உதவித்தொகை, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து உதவித்தொகை, தனிநபர் கடன் உதவிகள், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் உதவிகள், கல்வி கடன் உதவிகள், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாங்க கடன் உதவிகள், சுயவேலைவாய்ப்பு மற்றும் எளியவர்களுக்கான கூலியுடன் கூடிய வேலைத்திட்டம், தொழில் நுட்ப பயிற்சியின் மூலம் திறனை மேம்படுத்துதல், சிறுபான்மையின மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல், மின்விளக்கு, தார்ச்சாலை, போக்குவரத்து உள்ள அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்கென பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தொடர்பாக சிறப்பு முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு வணிக வங்கிகள் மூலம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் 3 சதவீத குறைந்த வட்டியுடன், வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எஸ்.சரவணன்,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்டஊரக வளா;ச்சி முகமை) திரு.வே.பிச்சை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மை அலுவலர் திரு.சேகா;, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா; திரு.மூ.காளிமுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைப்பு நிர்வாகிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|