Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:33 AM
வியாழன் | 22 பிப்ரவரி 2024 | துல்ஹஜ் 1666, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3715:5818:3319:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:34Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:56
மறைவு18:28மறைவு05:01
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2305:4806:12
உச்சி
12:31
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19470
#KOTW19470
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 26, 2017
அதிரையில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் KSC அணி கோப்பையை வென்றது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் காயல் ஸ்போட்டிங் கிளப் - KSC அணி கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

அதிரை SSMG குல் முஹம்மது நினைவு 17ஆம் ஆண்டு & அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23ஆவது ஆண்டாக நடத்தும் மாநில எழுவர் கால்பந்து போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 26 முதல் அதிரை கடற்கரைத் தெரு ITI மைதானத்தில் துவங்கி ஜூலை 25ஆம் நாள் வரை சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்றது.

இப்போட்டியில் அதிரை AFFA, WFC, AYFA அணிகள், சென்னை, திருச்சி, கோவை, நாகை, தஞ்சை, காரைக்கால், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய அணிகளுடன் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணியும் பங்கேற்றது.



நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், திண்டுக்கல் அணி தஞ்சை நெப்போலியன் அணியை 4-1 என்ற கோல் கணக்கிலும், KSC அணியினர் தஞ்சை நேத்தாஜி அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறின.

KSC மற்றும் தஞ்சை திண்டுக்கல் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி ஜூலை 25ஆம் நாள் செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. அதில் KSC அணி திண்டுக்கல் அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முஹம்மது அலி முற்பாதி ஆட்டத்தில் ஒரு கோலும் ஹனிபா பிற்பாதி ஆட்டத்தில் இரண்டு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற KSC அணிக்கு சுழற்கோப்பையும், ரூபாய் 30 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டன.



வெற்றிக்கு முனைந்த திண்டுக்கல் அணிக்கு கோப்பையும், ரூபாய் 20 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டன. இறுதிப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் தனிப் பரிசுகளும் அளிக்கப்பட்டன.



இப்போட்டித் தொடரின் சிறந்த வீரராக KSC அணியின் முஹம்மத் ஹனீஃபா, சிறந்த கோல் கீப்பராக அதே அணியின் எம்.டீ.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டனர்.



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காயலர்கள், அதிராம்பட்டினம் & சுற்றுவட்டாரத்தினர் உட்பட திரளான விளையாட்டு ஆர்வலர்கள் இப்போட்டியைக் கண்டுகளித்தனர்.





காயல்பட்டினம் KSC அணியின் பயிற்சியாளர் செய்யித் முஹ்யித்தீனின் பயிற்சியின் கீழ், அவ்வணி இவ்வாண்டில் பெறும் 5ஆவது கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.



தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் & முத்து இப்றாஹீம்


[செய்தி திருத்தப்பட்டது @ 09:15 / 26.07.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by MUTHU IBRAHIM (Hong Kong) [26 July 2017]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 45690

இறுதி போட்டியில் KSC அணியினர் திண்டுக்கல் அணியினரை 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்கள் என்று திருத்திக் கொள்ளவும்!

Moderator: திருத்தப்பட்டது! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. http://www.adirainews.net/2017/07/blog-post_47.html
posted by M.A.C.AHAMED THAHIR (RIYADH) [26 July 2017]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45691

http://www.adirainews.net/2017/07/blog-post_47.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்போர்ட் (படங்கள்)
posted by M.A.C.AHAMED THAHIR (RIYADH) [26 July 2017]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45692

அதிராம்பட்டினம் செய்திகள்
அதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

http://www.adiraixpress.in/2017/07/blog-post_25.html

http://www.adirainews.net/2017/07/blog-post_47.html

http://adiraipirai.in/archives/41181


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved