காயல்பட்டினத்தில் பல தெருக்களின் வழியே கடந்து செல்ல தீயணைப்பு வாகனங்களுக்குப் பெரும் திண்டாட்டமாக உள்ளது.
இயல்பிலேயே குறுகலான தெருக்கள் ஒருபுறமிருக்க, பல தெருக்களில் அவ்வப்போது சிறிது சிறிதாக நடைபெறும் ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாதிருப்பதும் இதற்கு முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது.
04.07.2016. அன்று, நெய்னார் தெருவிலிருந்து குறுகலான சாலைத் திருப்பத்தின் வழியே சிறிய குத்பா பள்ளி அமைந்துள்ள பகுதியைத் தீயணைப்பு வாகனமொன்று கடக்க முயற்சித்தபோது பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது. சில மணித்துளிகள் போராட்டத்தையடுத்து அவ்வாகனம் கடந்து சென்றது.
1. இறைவனின் பயம் ... posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[25 July 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45689
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தெருக்களின் திருப்பங்களில் தீயணைப்பு வாகனம் செல்ல திண்டாடுவது ஒருபக்கமிருக்க - தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்லவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நம் மக்களிலே பலரும், வீடுகள் கட்டும்பொழுது தெருக்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர் – இன்னும் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பதிலே ஒவ்வொருவரும் ஆனந்தபடுகின்றனரே தவிர – இறைவனுக்கு பயப்படுகிறதாக தெரியவில்லை.
------------------------------------
ஆக்கிரமிப்பவர்கள் அனைவருமே ஹலால் – ஹராம் பார்க்காது பணத்தை சேர்த்தவர்களே! உண்மையாக , நேர்மையாக பணம் சம்பாதித்திருந்தால் ஆக்கிரமிப்பது இருக்காது – அவர்களிடம் இறைவனின் பயம் இருக்கும்.
ஒருவர் வீடு கட்டுகிறபோது பொதுபாதையிலிருந்து ஓர் அடி எடுத்தால் அடுத்தவர் வீடு கட்டுகிறபோது இரண்டு அடி எடுக்கிறார் - குறைந்தது ஒன்றரை அடி எடுக்கிறார் – அப்படி எடுக்காதிருந்தால் அது அவருக்கு கெளரவ குறைச்சல் – இதுதான் இன்றைய மக்களின் நிலை.
அல்லாஹ் நம் மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross