தூத்துக்குடி பனிமயமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் நாளன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரம் பனிமயமாதா கோவில் திருவிழா ஆகஸ்ட் 05ஆம் நாளன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று (05.08.2017.) சனிக்கிழமை என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணி நாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை, மின் வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும், 05.08.2017. அன்று அரசுத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இது செலாவணி முறிவுச் சட்டத்தின் படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பகரமாக, 12.08.2017. இரண்டாம் சனிக்கிழமையன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|