காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.ஏ.என்.அஹ்மத் மீராத்தம்பியின் தாயார் – எம்.எல்.செய்யித் அஹ்மத் ஃபாத்திமா, நேற்று 16.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 64. அன்னார்,
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் எஸ்.இ.மாமுனா லெப்பை அவர்களின் மகளும்,
மர்ஹூம் ‘சீரும் புலி’ அஹ்மத் மீராத்தம்பி அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் ஏ.எம்.டீ.செய்யித் அஹ்மத் நெய்னா அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் எம்.எல்.செய்யித் இப்றாஹீம் அவர்களின் சகோதரியும்,
மர்ஹூம் கே.எம்.இப்றாஹீம், என்.டீ.முஹ்யித்தீன், டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ, மர்ஹூம் ஹபீப் நெய்னா ஆகியோரது மனைவியரின் சகோதரியும்,
கிதுரு முஹ்யித்தீன், மாமுனா லெப்பை, ஹஸன் நளீம், ஸதக்கத்துல்லாஹ் நாஸர், முஹம்மத் நூஹ் ஃபைஸல் ஆகியோரின் சிறிய தாயாரும்,
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, ஷெய்க் நூருத்தீன் ஆகியோரின் பெரிய தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 11.00 மணிக்கு, காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.M.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ |