கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – தேசிய மாணவ இயக்கம் சார்பில், “அக்லாக் முதல் ஜுனைத் வரை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.; அதற்கு நான் சாட்சி!” எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கம், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் ரூமான் தலைமையில், பொதுச் செயலாளர் யாஸிர், செயற்குழு உறுப்பினர் முஹம்மத் ஃபாஸில், அபுல் ஃபைஸல் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் – காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டு, முழக்கத்தை ஆதரித்து பொதுமக்களிடம் கைச்சான்றுகளைப் பெற்றனர்.
தகவல் & படங்கள்:
ஷேக் ரூமான்
(தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
|