காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க வலியுறுத்தி, நகராட்சி ஆணையருக்கு SMS அனுப்பிடுமாறு பொதுமக்களுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தற்போது பிரதன சாலையில் உள்ள தபால் நிலையம் - தனக்கான புது இடத்தை தேடி வருகிறது.
பல வகையிலும் சிறந்த மாற்று இடமான பேருந்து நிலைய வளாகத்தில், புதிய தபால் நிலையத்தை நகராட்சி மூலம் கட்டிட வலியுறுத்தி - நகராட்சி ஆணையருக்கு கீழ்க்காணும் குறுஞ்செய்தியை, நகரில் தற்போது நடைபெறும் கையெழுத்து வேட்டையில் பங்கேற்க முடியாத காயலர்கள் - SMS மூலமோ, WHATSAPP மூலமோ - அனுப்பிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காயல்பட்டினம் நகராட்சி ஆணையரின் அலைபேசி எண்:
+91 94438 58174
===========================
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அவர்களுக்கு,
பேருந்து நிலையத்தில் உள்ள காலியிடத்தில் புதிய தபால் நிலையம் கட்டிடத்தை - நகராட்சி மூலம் கட்டிட - தங்களை கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் பொது மக்களும் பயன்பெறுவர்; நகராட்சிக்கும் வருமானம் பெருகும்.
[உங்கள் பெயர்]
[உங்கள் விலாசம் / தற்போதைய ஊர்]
Respected Kayalpattinam Municipality Commissioner,
We request you to construct the new post office building in Bus Stand Complex. This would not only benefit the public, but also increase the income of the Municipality.
[your name]
[your address / current location]
====================================
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 3, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |