காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் மக்தப் ஆசிரியரும் – இமாமுமான, ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.டி.ஷாஃபிஈ என்ற ஷாஃபி ஹாஜி, 02.08.2017. புதன்கிழமையன்று 23.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,
மர்ஹூம் எம்.கே.ஷெய்க் தாவூத் அவர்களின் மகனும்,
மர்ஹூம் ஞானி ஹபீப் முஹம்மத் அவர்களின் மருமகனாரும்,
எஸ்.டி.முஹம்மத் ஸாலிஹ், எஸ்.டி.ஷெய்க் அப்துல் காதிர், எஸ்.டி.ஷாஹுல் ஹமீத், எஸ்.டி.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஷெய்க் தாவூத் என்ற தாவூத் பின் ஷாஃபிஈ உடைய தந்தையும்,
காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் எஸ்.அஹ்மத் ரிஃபாய், மர்ஹூம் ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் நூஹ், என்.எம்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ, சொளுக்கு முஹம்மத் தம்பி ஆகியோரின் மாமனாரும்,
ஞானி எச்.எம்.அபுல்ஹஸன் ஷாதுலீ, ஞானி எச்.எம்.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (03.08.2017. வியாழக்கிழமை) 10.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படம்:
P.M.I.ஸஊத் (செயலாளர் – ஹாங்காங் பேரவை),
ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ,
H.ஷம்சுத்தீன்,
ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான்,
ஹாஃபிழ் M.A.C.அஹ்மத் தாஹிர் |