காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு, சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றம் சார்பில் ஃபிஸியோதெரபி கருவி வழங்கப்பட்டுள்ளது.
03.08.2017. வியாழக்கிழமையன்று துளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ், பொருளாளர் எம்.எல்.முஹம்மத் ஹஸன், பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத், துளிர் அபிமானி ஏ.எல்.முஹம்மத் நிஜார் ஆகியோர் இணைந்து, துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பையிடம் கருவியை வழங்கி, அதைப் பயன்படுத்தும் முறையை விளக்கினர்.
இந்த உதவிக்காக, ரியாத் காயல் நல மன்றத்திற்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
|