தமது அமைப்பின் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரான எஸ்.டி.ஷாஃபிஈ ஹாஜி மறைவுக்கு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்! இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்!!
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங் அமைப்பின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர் அல்ஹாஜ் S.D.முஹம்மது ஷாபிஈ அவர்கள் 02 -ஆகஸ்ட் -2017 புதன் கிழமை நள்ளிரவு 11 :30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் என்ற செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் எமது பேரவையின் ஆலோசகராக இருந்தவரும் , அதன் செயல்பாடுகளில் மிகவும் தீவிர பங்காற்றியவருமாவார். மேலும், ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜிதில் மாணவ-மாணவியருக்கான மக்தப் வகுப்பு முறையை ஏற்படுத்தி, அதன் குழுவினருடன் தானும் கவுரவ முதன்மை ஆசிரியராக தலைமையேற்றுப் பணியாற்றி வந்தவருமாவார்கள் .பிரதிபலன் பாராது இறைவனிடம் மறுமையின் நற்கூலியை மட்டுமே கருத்திற்கொண்டு அயராது உழைத்து வந்த அன்னாரது உன்னதமான சேவையை எமது பேரவை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் அன்னாரது மகனாரும் எமது பேரவையின் செயற்குழு உறுப்பினருமான அல்-ஹாபிழ் M . S . ஷேக் தாவூத் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் மக்தப் ஆசிரியப்பெருந்தகைகள்- மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
L.A.K.புகாரீ,
(செயற்குழு உறுப்பினர், ஹாங்காங் பேரவை) |