காயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தை, பேருந்து நிலைய வளாகத்தில் அமைத்திடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் ஆதரவுக் கைச்சான்றுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் தபால் நிலையம் - பல ஆண்டுகளாக, பிரதான வீதியில், தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. புதிய வளாகத்திற்கு மாறவேண்டிய சூழல் தற்போது எழுந்துள்ள நிலையில், மாற்றாக புதிய இடத்தை தபால் துறை தேடி வருகிறது.
*பொது மக்களுக்கு வசதியாகவும், எளிதாக அணுகிடும் வகையிலும் இருக்கும் என்பதனாலும் பேருந்து நிலையத்தில் உள்ள காலியிடத்தில், தபால் நிலையத்தை கட்டித்தர, காயல்பட்டினம் நகராட்சியிடம் - தபால்துறை சார்பாக கோரிக்கைகளும் பல மாதங்களாக வைக்கப்பட்டு வருகிறது.*
*பொருத்தமான இடம் விரைவில் கிடைக்காத பட்சத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தபால் நிலையம் சென்றுவிடும் அபாயம் இருப்பதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடத்தில் தபால் நிலையம் கட்டிட வலியுறுத்தி பொதுமக்களிடம் நடப்பது என்ன? குழுமம் கையெழுத்து வேட்டை துவங்கியுள்ளது.*
_இக்கோரிக்கை மனு - பொதுமக்கள் சார்பாக, நகராட்சி உட்பட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளிடமும் - இறைவன் நாடினால் - வழங்கப்படும்._
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: ஆகஸ்ட் 1, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|