திருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் பயணியர் ரயில்கள் இயக்கத்தில் செப்டம்பர் 19ஆம் நாள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் பொதுமக்கள் நலன் கருதி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
திருச்செந்தூரில் இருந்து தினமும் - திருநெல்வேலி நோக்கி - ஆறு பயணியர் ரயில் வண்டிகள் இயக்கப்படுகின்றன. அது போல - திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கியும், ஆறு பயணியர் ரயில் வண்டிகள் இயக்கப்படுகின்றன.
அவற்றில் இரண்டு ரயில் வண்டிகளின் இயக்கத்தில் - தென்னக ரயில்வே மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. *இந்த மாற்றங்கள் - ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 19 வரை (வியாழன் நீங்கலாக) அமலில் இருக்கும்.*
*தினமும் மாலை 4:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டியும், மாலை 6:35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்படும் வண்டியும் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 19 வரை (வியாழக்கிமை தவிர்த்து) முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.*
*காலை 7:35 மணிக்கு பழனியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி புறப்படும் ரயில், சாத்தூர் ரயில் நிலையத்தை மதியம் 11:39 சென்றடையும். அங்கு இரண்டு மணி நேரம் இவ்வண்டி நிறுத்திவைக்கப்பட்டு, 4:30 நேரம் காலதாமதமாக (இரவு 8:30 மணிக்கு) திருச்செந்தூர் சென்றடையும்.*
பழனி - திருச்செந்தூர் மார்க்க வண்டி, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி மாலை 6:35 மணிக்கு புறப்படும் என தெரிகிறது (முந்தைய நேரம் மதியம் 2:00 மணி).*
இதர ரயில் வண்டிகள் இயக்கத்தில் மாற்றம் இல்லை:
_(1) திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7:05 (திருநெல்வேலி), 9:15 (திருநெல்வேலி), 11:10 (பழனி), மதியம் 2:35 (தூத்துக்குடி) மற்றும் மாலை 5:55 (திருநெல்வேலி) மணிக்கு வண்டிகள் இயக்கப்படும்_
_(2) திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி தினமும் காலை 7:20, 9:30, 11:15 (தூத்துக்குடியில் இருந்து வரும் வண்டி), மாலை 4:15 மணிக்கு வண்டிகள் இயக்கப்படும்._
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: ஆகஸ்ட் 1, 2017; 7:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|