சஊதி அரபிய்யா ஜித்தாவில் இயங்கும் நம் நகர் மக்களின் நல அமைப்பான காயல் நற்பணி மன்றத்தின் அறிக்கை பின்வருமாறு:-:-
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 104 வது செயற்குழு கூட்டம் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது.
கூட்டத்திற்கு மன்றத்தலைவர் குளம் அஹ்மது முஹ்யித்தீன் முன்னிலை வகிக்க, மன்ற ஆலோசகர் மருத்துவர் ஜியாது அபூபக்கர் தலைமை ஏற்றார். சகோ.அரபி முஹம்மது ஷுஐபு இறைமறை ஓதினார்.
தலைமையுரை:
மன்றப்பணிகளின் அவசியம் குறித்த செய்திகளை தலைமை உரையாக தந்தார் மருத்துவர் ஜியாது அபூபக்கர்.
மன்றத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற சகோதரர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் உரிமையோடு வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள் வைத்தார் தலைவர் குளம் அஹ்மது முஹ்யித்தீன்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த ரமலானில் இஃப்தார் நிகழ்வுடன் நடந்தேறிய பொதுக்குழு குறித்தும், அதில் நமதூர் இமாம்கள் மற்றும் முஅத்தின்களை சிறப்பிக்க வேண்டி வேண்டுகோள் வைக்கப்பட்ட சில நிமிடங்களில் லட்சங்களை வாரி வழங்கிய கொடை உள்ளங்களை மகிழ்வோடு நினைவுகூறுகிறோமென்றும், மற்ற மன்றசெயல்பாடுகள் குறித்த விபரங்களையும் விரிவாக கொடுத்தார் செயலர் சட்னி செய்யிது மீரான்.
மன்றத்தின் செயல்பாடுகளை இன்னும் எவ்வழியிலெல்லாம் முன்னெடுக்கலாம் என்றும், நம் பணிகளுக்கு முதுகெலும்பான சந்தாக்களை விரைந்து செலுத்த சகோதரர்களை அணுக வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் செயலர் செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை:
மன்றம் இதுவரை பெற்ற வரவு, செலவு மற்றும் இருப்பு விபரங்களை நிதிநிலையாக சமர்பித்தார் சகோ.முஹம்மது ஆதம்.
கல்வி மற்றும் மருத்துவ உதவிகள்:
விடுப்பில் தாயகத்தில் இருந்த சமயம் ஷிஃபா மற்றும் இக்ரஃ சிறப்புக்கூட்டங்களில் கலந்து பரிமாறிய செய்திகளை விபரமாக சொன்னார் சகோ.சட்னி முஹம்மது லெப்பை.
உரிமையோடு உதவி கேட்டு வந்த சொந்தங்களின் கல்வி மற்றும் மருத்துவ மனுக்கள்னு வாசிக்கப்பட்டு கல்வி வகைக்காக பத்து நபருக்கும், மருத்துவ வகைக்காக ஒன்பது நபருக்கும் முறையே மன்றத்தின் உதவிகள் அறிவிக்கப்பட்டன.
மன்றத்தின் 105 வது செயற்குழு இன்ஷாஅல்லாஹ் அதே இம்பாலா உணவகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
சகோ.செய்யிது அஹ்மத் அனுசரணையில் இரவு உணவு வழங்கப்பட்டு, சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன் நன்றி கூற, சகோ.ஜாஃபர் ஸாதிக் பிராத்திக்க துஆ கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
14.07.2017.
|