காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகளைக் குறித்த நேரத்தில் இயக்கவும், அணைக்கவும் நகராட்சியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளதோடு, உலகெங்கும் பின்பற்றப்படும் வழிமுறை விபரங்களையும் கையளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் - சில நேரங்களில், அதிகாலை சூரிய வெளிச்சம் வருவதற்கு - வெகு முன்னரே, தெரு விளக்குகள் அணைக்கப்படுகிறது.
அது போல சில - நேரங்களில் - மாலையில், சூரியன் மறைந்து வெகு காலதாமதமாக தெரு விளக்குகள் எரிய துவங்குகின்றன. இதனால் பொது மக்களுக்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.
இன்னும் சில நேரங்களில் - பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிகின்றன. இதனால் - மின்சாரம் வீணடிக்கப்படுகிறது.
எனவே - காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள தெருவிளக்கிற்கான TIMER கருவிகளில், உலகளவில் பின்பற்றப்படும் CIVIL TWILIGHT நேரத்தை பதிவு செய்து, அதன்படி - தெரு விளக்குகளை எரியவிடவோ, அணைக்கவோ ஏற்பாடு செய்யக்கோரி - நகராட்சியின் பொறியாளர் திரு பாலமுருகனிடம் இன்று, நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவுடன் - காயல்பட்டினம் நகரின் ஓர் ஆண்டிற்கான - அந்திநேரம், சூரியன் உதயம், மறைவு நேரங்கள் அடங்கிய கால அட்டவணையும் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 7, 2017; 3:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|