காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 7 பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்கீழ், பெரிய நெசவுத் தெரு, கொச்சியார் தெரு ஆகிய தெருக்களில் பேவர் ப்ளாக் சாலை புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி சார்பாகவே 7 பணிகளுக்கு, டெண்டர் அறிவிப்பு விடப்பட்டுள்ளது.
ஜூலை 13 தேதியை அறிவிப்புப்படி, விடப்பட்ட டெண்டர்கள் ஆகஸ்ட் 3 அன்று திறக்கப்படும்.
டெண்டர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் கொச்சியார் தெரு சாலையும் பெரிய நெசவு தெரு சாலையும் பேவர் பிளாக் கற்களைக்கொண்டு சீரமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 5, 2017; 9:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|