தூத்துக்குடி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை இன்று வினியோகிக்கப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட பகுதியிலுள்ள 1597 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும 267; தனியார் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் 1505 அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை 10.08.17; தேதி வியாழக்கிழமை வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்;கு வயிற்று குடற்புழுவை தடுக்க தமிழகம் முழுவதும் அல்பென்ட்சோல் என்கிற மாத்திரை ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதியில் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்குவது சம்பந்தமாக 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 நகர்நல மையங்கள் மூலமாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியா;கள் மூலம்; குடற்புழு நீக்க நாளான 10.08.17 தேதியன்று (வியாழக்கிழமை) இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது. சிறுகுடலில் உள்ள இரும்புசத்தை கொக்கிபுழு, நாடாபுழு என்கிற புழுக்கள் சாப்பிட்டு விடுகின்றன. இதனால் மேற்கண்ட நோய் தாக்கத்திற்கு குழந்தைகள் ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க தேசிய அளவில் குழந்தைகளுக்கு குடற்புழுவை ஒழிக்க கூடிய அல்பென்ட்சோல் மாத்திரை 10.08.17; தேதி வியாழக்கிழமை அன்று வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே றுஐகுளு என்கிற திட்டப்படி ஆண்டிற்கு இரண்டு முறை பிப்ரவாp மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 11 முதல் 19 வயது வரையுள்ள வளர் இளம் பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரை, கிருமி நீக்க மாத்திரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 10.08.17; தேதி வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஒன்று முதல் 19 வயது வரையுள்ள பள்ளி குழந்தைகள், அரசு மற்றும், அரசு உதவி பெறும் தனியார்பள்ளிகள் 1864 பள்ளிகளில் பயிலும் 3,44,680, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1,20,754, 6-19 வயதில் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 61,658 உள்ளிட்ட மொத்தம் 5,27,092 பேருக்கு அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு மதியம் சாப்பாட்டிற்கு பின் வழங்க வேண்டும். ஓன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 10ம்தேதி வழங்க கூடிய மாத்திரைகளை பள்ளியில் ஆசிரியர்களுக்கு முன்பாகவும், அங்கன்வாடி மையத்தில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பொறுப்பாளர்கள் முன்பாகவும் குழந்தைகள் சாப்பிட வேண்டும். 10.08.17 தேதி மாத்திரை உட்கொள்ள முடியாத குழந்தைகளுக்கு 17.08.17 தேதி வியாழக்கிழமை அன்று மாத்திரை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி செல்லாத குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் சென்று அல்பென்ட்சோல் மாத்திரை உட்கொண்டு வருங்காலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர வேண்டும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
|