இந்தோனேஷியாவிலுள்ள கடலில் மூழ்கி, காயலர் உயிரிழந்துள்ளார். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த சாளை எஸ்.ஹுமாயூன் கபீர் உடைய மகன் சாளை ஷேக் ஷீத் (வயது 28). சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ‘க்ரஸண்ட் மெடிக்கல்ஸ்’ அன்ஸாரீ உடைய மகள் ஆயிஷா ஹுமைராவுக்கும், இவருக்கும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01ஆம் நாளன்று திருமணம் நடைபெற்றது.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், அங்கு தன் மனைவியுடன் வசித்து வந்தார். விடுமுறையைப் பயன்படுத்தி, மனைவி ஆயிஷா ஹுமைராவை அழைத்துக்கொண்டு நேற்று இந்தோனேஷியா நாட்டில் பின்தான் தீவிலுள்ள Mutiara Beach Resor உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள கடலில் இவர் இறங்கியபோது, அலையில் சிக்கி மூழ்கிவிட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனைக்குப் பின் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து, ஷேக் ஷீத் உடைய தந்தை சாளை ஹுமாயூன், சிறிய தந்தையும் – சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினருமான சாளை எஸ்.நவாஸ் உள்ளிட்ட சிங்கப்பூர் காயல் நல மன்ற அங்கத்தினர் இன்று காலையில் இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவிலுள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழர்கள் துணையுடன் நல்லடக்கம் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
நிறைவில், இந்தோனேஷியா பின்தாங் நகரிலுள்ள பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னார்,
மர்ஹூம் சாளை ஷேக் அவர்களின் மகன்வழிப் பேரனும்,
வாவு முஹ்யித்தீன் தம்பி உடைய மகள் வழிப் பேரனும்,
சாளை ஹுமாயூன் உடைய மகனும்,
‘க்ரஸண்ட் மெடிக்கல்ஸ்’ அன்ஸாரீ உடைய மருமகனாரும்,
சாளை அபூ ஸுஃப்யான் உடைய சகோதரரும்,
ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகியுமான சாளை நவாஸ் ஆகியோரின் சகோதரர் மகனும்,
சாளை அன்வர், சாளை அப்துந் நாஸர் ஆகியோரின் பேரனும்,
எம்.ஏ.அஃப்வான் அப்துல் காதிரின் மச்சானுமாவார்.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:34 / 10.08.2017.]
கூடுதல் தகவல்:
சாளை ஷேக் ஸலீம் |