காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் முதன்மைச் சாலையில் ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங் என்ற பெயரில் தையலகம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, பேரவை அங்கத்தினருக்கும் – அவர்களது குடும்பத்தினருக்கும் விளக்குவதற்காக, சிறப்புக் கூட்டம் இன்று 10.00 மணி முதல் 13.00 மணி வரை, தையலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் வருகை தந்துள்ள பேரவை உறுப்பினர்கள் தம் குடும்பத்தினர், உற்றார் – உறவினருடன் இக்கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளுமாறும், இதற்கான தனியழைப்பு கிடைக்கப் பெறாதவர்கள் இதையே அழைப்பாகக் கருதி தவறாமல் கலந்துகொள்ள வருமாறும், கூட்ட நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டியுபசரிப்பு நடைபெறவுள்ளதாகவும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் தெரிவித்துள்ளார்.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
(பிரதிநிதி, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங்)
|