இந்தோனேஷியா நாட்டில் காலமான காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும் – சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினருமான இளவல் சாளை ஷேக் ஷீத் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அம்மன்றத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த சாளை எஸ்.ஹுமாயூன் கபீர் உடைய மூத்த மகன் சாளை ஷேக் ஷீத் (வயது 28) சிங்கை காயல் நலமன்றத்தின் உறுப்பினராவார். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், அங்கு தன் மனைவியுடன் வசித்து வந்தார். தனது விடுமுறை நாட்களை கழிப்பதற்க மனைவியுடன், இந்தோனேஷியா நாட்டில் பின்தான் தீவிலுள்ள Mutiara Beach Resor எனும் சுற்றுலாத் தலத்திறக்கு சென்றுள்ளார். கடந்த 9/8/2017 அன்று மாலை அவர் தீவிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி மரணம் எய்தினார்.
விபரம் அறிந்து சிங்கப்பூரில் வசிக்கும் அவரது தகப்பனார், சிறிய தந்தை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காயலர்கள் இந்தோனேஷியாவுக்கு சென்று அவரது உடலைப் பெற்று, இறுதி சடங்குகளை செய்து அங்குள்ள பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.
அவரது மரணத்தை தொடர்ந்து (நேற்று) 11/82017 இரவு எட்டரை மணியளவில் சிங்கப்பூர் காயல் நலமன்றத்தின் சார்பில் மன்ற அலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் அவர்களின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மன்ற உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு மர்ஹூமிற்காக காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அன்னாரது தகப்பனார், சிறிய தந்தை மற்றும் அவரது மாமனார், மைத்துனர் ஆகியோருக்கு சலாம் கொடுக்கப்பட்டு அனைவரும் ஆறுதல் கூறினர்.
இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம்-முஹம்மத் ஹஸன் அவர்கள் தமது உரையில், இங்கு குடும்பத்துடன் வசிப்பவர்கள் அண்டை நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது தக்க துணையுடன் அல்லது கூட்டாக செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் பரிச்சயமில்லாத இடங்களுக்கு செல்லும்போது அங்குள்ள கடல், நீச்சல் குளம் போன்றவற்றில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளும்படியும் வேண்டினார். மன்றத்தார் சார்பாக அன்னாரது இழப்பால் தவித்து வாடும் தாய், தந்தை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழந்த இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்ததுடன், மர்ஹூமின் மண்ணறையை விசாலமாகவும், வெளிச்சமாகவும் ஆக்கி, மறுமையில் அவருக்கு மேலான சுவனபதியை அல்லாஹ் வழங்கியருள்வானாக என்றும் தமது உரையில் குறிப்பிட்டார். மேலும், மர்ஹூமிடத்தில் யாரரேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தால் அதை தெரிவிக்குமாறும் அதை அன்னாரது குடும்பத்தார் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவிப்பு செய்தார். நிகழ்வின் இறுதியாக மர்ஹூமின் ஹக்கில் துஆ ஓதி சலாம் கூறி விடை பெற்றுச் சென்றனர்.
எல்லாம் வல்ல நாயன் அன்னாரது பிழைகளைப் பொறுத்து, அனைவரது துஆவையும் கபூலாக்கி, அவரது மறுமை வாழ்வை மேலாக்கி வைப்பானாக...ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |