இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் நேற்று (15.08.2017. செவ்வாய்க்கிழமை) நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கொடியேற்ற நிகழ்ச்சி, அன்று 08.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கட்சியின் நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் மீராத்தம்பி கொடியேற்றினார்.
பின்னர், நாட்டுப் பற்றைப் பறைசாற்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஜாஹிர் ஹுஸைன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட, நகர நிர்வாகிகளான முஹம்மத் நஜீப், ராஸிக் முஸ்ஸம்மில், முஹம்மத் ஸபீர், சத்தாம், ஜிஃப்ரீ, மீரான், மொகுதூம், ஷாஹுல் ஹமீத், ஃபக்கீர் மற்றும் கட்சியின் அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
|