இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், இன்று 09.00 மணியளவில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தேசிய கொடியேற்றினார்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, இந்நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் ஒவ்வொரு குடிமகனும் பாடுபட வேண்டியது அவசியம் என்று பேசினார். சிறுமி ஹனா, இந்திய தேசியக் கொடியை வாழ்த்தி, கொடிவாழ்த்துப் பாடல் பாடினார்.
06ஆவது வார்டு செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
|