இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் நேற்று (15.08.2017. செவ்வாய்க்கிழமை) நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில் சுதந்திர நாள் விழா அன்று காலையில் நடைபெற்றது.
துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஜமால், நகரப் பிரமுகர் டீ.எம்.ஆர்.மர்ஸூக், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் முன்னாள் செயலாளர் எஸ்.எம்.ஜெ.பாக்கர், இலங்கை காயல் நல மன்ற செயலாளர் பி.எம்.ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாங்காங் காயல் நல சங்கத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் தேசிய கொடியேற்றினார்.
துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் – இந்தய விடுதலைப் போராட்ட வரலாற்றை விளக்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர், எஸ்.ஓ.பி.ஆயிஷா தலைமையில், துளிர் பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முதல்வர் சித்தி ரம்ஸான் நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. அனைவருக்கும் குளிர்பானம், இனிப்பு வழங்கப்பட்டது.
|