காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்கக் கோரும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனு - சென்னையிலுள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பிரதான வீதியில் பல ஆண்டுகளாக தனியார் இடத்தில செயல்புரிந்து வரும் தபால்நிலையம், தற்போது புதிய இடத்திற்கு மாற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலியிடங்களில் ஒன்றில் - தபால் நிலையத்திற்கு தேவையான கட்டிடத்தை கட்டித்தரக்கோரி - நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில் - பொது மக்கள், ஜமாஅத்துகள், கோவில் - தேவாலயம் நிர்வாகிகள், ஊர் நல குழுக்கள் ஆகியோரின் ஆதரவு கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
அக்கோரிக்கை மனு - நேற்று (ஆகஸ்ட் 16), சென்னை தலைமை செயலகத்தில் - தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவிலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியிடமும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 16, 2017; 5:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|