இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் 15.08.2017. அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி சார்பில், அன்று 08.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகிகளும், அபிமானிகளும், பிரமுகர்களுமான டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், அபூதாஹிர், கே.எம்.டீ.சுலைமான், ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ, ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப், ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன், என்.எம்.அப்துல் காதிர், ஏ.கே.அப்துர்ரஹ்மான், எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, ஏ.கே.ஷம்சுத்தீன், குளம் முஸ்தஃபா கமால், காயல் முத்துவாப்பா, எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் சுல்தான் ஆரிஃப் கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்து, பள்ளி இறைவணக்கப் பாடல்களைத் தொடர்ந்து, நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பள்ளி இயக்குநரும் முதல்வருமான ஆர்.ரத்தின சாமி வரவேற்றார். பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தமிழாசிரியை எம்.கோமதி நன்றி கூற, நாட்டுப்பண், துஆ ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை பள்ளியின் கணித ஆசிரியர் அப்துர்ரவூஃப் நெறிப்படுத்தினார்.
பள்ளியின் பெண்கள் பிரிவில் சுதந்திர நாள் விழா அன்று 09.00 மணியளவில் நடைபெற்றது. நிறுவனர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமையேற்க, எம்.ஏ.ஜுபைதா, எஸ்.டீ.செய்யித் கதீஜா, செய்யித் ஸஃபிய்யா, எம்.ஏ.கே.ராழியா, கிருது ஃபாத்திமா, ஃபவுஸியா பேகம், ஏ.கே.செய்யித் கதீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்து, இறை வணக்கப் பாடல்களை மாணவியர் பாடியதைத் தொடர்ந்து, பள்ளியின் துணைத்தலைவர் ஏ.கே.செய்யித் அப்துல் காதிர் தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ள மாணவியர் கொடி வாழ்த்துப் பாடல் பாடினர்.
தலைமையாசிரியை சிரோன்மணி வரவேற்றார். மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நன்றியுரை, நாட்டுப்பண், துஆ, ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
(மக்கள் தொடர்பாளர், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
|