காயல்பட்டினம் ஜாவியாவில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 153ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் 08.08.2017. அன்று துவங்கி 14.08.2017. வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நாட்களில் அன்றாடம் 20.30 மணி முதல் 21.30 மணி வரை பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
08.08.2016. அன்று, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - “ஷாதுலீ இமாமின் தோற்றம், ஷாதுலிய்யா தரீக்காவின் ஏற்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
09.08.2017. அன்று, “இஸ்லாமில் இறையச்சம்” எனும் தலைப்பில், ஜாவியா அரபிக்கல்லூரி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
10.08.2017. அன்று, “இஸ்லாமின் பார்வையில் தியாகம்” எனும் தலைப்பில், ஜாவியா அரபிக் கலலூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ உரையாற்றினார்.
11.08.2017. அன்று, “நாவைப் பேணுவோம்!” எனும் தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றினார்.
12.08.2017. அன்று, “ஷாதுலிய்யா ஷெய்குமார்களின் சரித்திரம்” எனும் தலைப்பில், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ உரையாற்றினார்.
13.08.2017. அன்று, “தியாகச் செம்மல்கள் ஸஹாபாக்கள்” எனும் தலைப்பில், ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
14.08.2017. கந்தூரி நாளன்று 09.00 மணிக்கு திக்ர் ஹல்காவும், அதனைத் தொடர்ந்து யவ்முல் இல்ம் - கல்வி நாள் நிகழ்ச்சியும், பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றன.
அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் வழீஃபா யாக்கூத்திய்யாவும், இஷா தொழுகைக்குப் பின் திக்ர் ஹல்காவும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, “ஷாதுலிய்யா தரீக்காவின் உஸூல்களும், வழிமுறைகளும்” என்ற தலைப்பில், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ உரையாற்றினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
|