புதிதாக கிணறு தோண்டப்பட்டமை உட்பட – காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பல்வேறு மராமத்துப் பணிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரசு மருத்துவமனையில் புதிய கிணறு உட்பட நடப்பது என்ன? குழுமம் அனுசரணையில் பல்வேறு மராமத்து பணிகள்!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் - கடந்த சில மாதங்களாக, நடப்பது என்ன? குழுமம் - பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
#iUseGH என்ற ஹாஷ் டேக் மூலம், சமூக ஊடகங்கள் வாயிலாக, பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கிய நடப்பது என்ன? குழுமம் -
-- அரசு மருத்துவமனையின் இலவச Non-Communicable Diseases திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டது
--- மருத்துவமனை முகப்பு வளையத்திற்கு டைல்ஸ் பதித்தது
--- டைல்ஸ் பதித்தது ஆண்கள் வார்டு கட்டிடத்தில் பெரிய அளவிலான மராமத்து பணிகள் மேற்கொண்டது
அதன் தொடர்ச்சியாக - சமீபத்தில்,
=== மருத்துவமனை சந்தித்த குடிநீர் பிரச்னையை கருத்தில் கொண்டு புதிதாக கிணறு அமைத்தது
=== ஆண்கள் வார்டில் மோசமான நிலையில் இருந்த படுக்கைகளை சீர்செய்தது
=== மருத்துவமனையின் வார்டுகள், வெளி நோயாளிகளை பார்க்கும் கட்டிடத்தின் காத்திருக்கும் அறை ஆகிய இடங்களில் வேலை செய்யாமல் இருந்த தொலைக்காட்சிகளை சரி செய்தது
உட்பட சில மராமத்து பணிகளை, நடப்பது என்ன? குழுமம் சமீபத்தில் செய்து முடித்துள்ளது, எல்லாப்புகழும் இறைவனுக்கே.
மேலும் - அரசு மருத்துவமனையில் உள்ள நான்கு மருத்துவர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட - கடந்த சில மாதங்களாக, சென்னையில், தூத்துக்குடியில் பல்வேறு முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் செய்து வருகிறது.
அதன் பயனாக, சமீபத்தில் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மருத்துவர் நியமனம் செய்யப்பட்டார். எஞ்சியுள்ள இரு காலியிடங்களை நிரந்தரமாக நிரப்பிட, நடப்பது என்ன? குழுமம் - தொடர்ந்து, முயற்சிகளை செய்து வருகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 17, 2017; 5:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|