காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில், 14.08.2017. அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஃகாலித் அன்ஸாரீ, முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகிய இருவர் ‘மவ்லவீ ஆலிம் அல்ஃபாஸீ’ ஸனது – பட்டம் பெற்றனர்.
தமது உறுப்பினர்களான அவ்விருவரும் ‘மவ்லவீ ஆலிம் அல்ஃபாஸீ’ ஸனது – பட்டம் பெற்றமைக்காக, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், பாராட்டு விழா – 21.08.2017. திங்கட்கிழமையன்று 17.30 மணியளவில், புகாரீ நினைவு நூலக வளாகத்தில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஹம்மத் ஈஸா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முன்னாள் செயலாளரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்றார்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் சார்பில் – அதன் துணைத்தலைவரும், நிகழ்ச்சி தலைவருமான நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், மற்றொரு துணைத்தலைவர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். (நிகழ்ச்சிக்கு வருகை தர இயலாமல் போன மாணவர் சார்பாக, அவர்களது ஆசிரியருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.)
புதிய ஆலிம்களை ஊக்கப்படுத்தும் வகையில், சமூக ஆர்வலர்களும் – இளைஞர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுமான முல்லாக்கா எம்.ஐ.கலீலுர் ரஹ்மான், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் அனுசரணையளிக்க, தலா 1000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது. முன்னணியின் மூத்த உறுப்பினர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், எம்.ஐ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் அவற்றை வழங்கினர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பாராட்டு பெற்ற ஆலிம்கள் சார்பாக மவ்லவீ ஃகாலித் அன்ஸாரீ அல்ஃபாஸீ ஏற்புரையாற்றினார்.
முன்னணியின் செயலாளர் சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளியின் இமாமும் – கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் ஐக்கிய முன்னிணியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஜாவியா அரபிக் கல்லூரி அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அல்தாஃப் எம்.எஸ்.முஹம்மத் லெப்பை அனுசரணையில், எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி, செய்யித் இப்றாஹீம், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
படங்களுள் உதவி:
‘கரு’ S.A.செய்யித் இப்றாஹீம் |