காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பும், காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையும் இணைந்து, “மன அழுத்தத்தை எதிர்கொள்வதெப்படி?” எனும் தலைப்பில் உளவள கருத்தரங்கத்தை, இன்று 19.00 மணிக்கு, துளிர் பள்ளி கேளரங்கில் நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறை நரம்பியல் மனநோய் மருத்துவராகப் பணியாற்றுபவரும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் உமர் ஷரீஃப் கலந்துகொண்டு, கருத்துரையாற்றுவதோடு, பங்கேற்போரின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு, ஈரமைப்புகளும் இணைந்து கேட்டுக்கொண்டுள்ளன.
|