காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பும், காயல்பட்டினம் துளிர் அறக்கட்டளையும் இணைந்து, “மன அழுத்தத்தை எதிர்கொள்வதெப்படி?” எனும் தலைப்பில் உளவள கருத்தரங்கத்தை, 23.08.2017. புதன்கிழமையன்று 19.00 மணிக்கு, துளிர் பள்ளி கேளரங்கில் நடத்தின.
இங்கிலாந்து நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறை நரம்பியல் மனநோய் மருத்துவராகப் பணியாற்றுபவரும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் உமர் ஷரீஃப் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்துரையாற்றியதோடு, பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கும் விளக்கமுமளித்தார். அவருக்கு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். துளிர் நிர்வாகத்தின் சார்பில் அதன் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நினைவுப் பரிசு வழங்கினார்.
முன்னதாக, துளிர் மறுவாழ்வுப் பணிகள் தலைவர் அ.வஹீதா தலைமை தாங்கினார். நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் முன்னிலை வகித்தார். துளிர் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் வரவேற்றார். துளிர் ஆலோசகர் சுப்பிரமணியம் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, துளிர் பள்ளி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
|