SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), அதன் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மெத்தனம் கலைத்து, விரைந்து விசாரித்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும்,
இந்நிகழ்விற்குக் காரணமாகிவிட்ட தனியார் பேருந்து நிறுவனம், இறந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆவன செய்யவும், அரசு நிவாரணம் வழங்கவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமுமுக, மமக மாவட்ட / நகர நிர்வாகிகளான யூஸுஃப், முஹம்மத் ஹஸன், புகாரீ, நியாஸுத்தீன், ஜாஹிர் ஹுஸைன், காதர், முஹ்ஸின் முர்ஷித், ஐதுரூஸ், காந்திமதிநாதன் உள்ளிட்டோர் இணைந்து இக்கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
படம்:
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின்
|