காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கிடையே, விநாயக சதுர்த்தி ஊர்வலம், காயல்பட்டினம் வழித்தடத்தை அமைதியாகக் கடந்து சென்றுள்ளது.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, 27.08.2017. அன்று - ஆறுமுகநேரி, சுற்றுவட்டாரங்களில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை திருச்செந்தூர் கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
காயல்பட்டினத்தில் - இரத்தினபுரி, மகாத்மா காந்தி நினைவு வளைவு, விசாலாட்சியம்மன் கோவில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக ஊர்வலம் கடந்து செல்ல காவல்துறையால் வழித்தடம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அன்று 16.15 மணியளவில் காயல்பட்டினம் வழியே விநாயகர் ஊர்வலம் அமைதியாகக் கடந்து சென்றது.
|