காயல்பட்டினத்துடன் தொடர்புடையவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முன்னாள் கவுரவ ஆலோசகர் மறைந்த எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் உடைய நெருங்கிய நண்பரும் – பள்ளித் தோழரும், காயலர்கள் பலரால் மிகவும் அறியப்பட்டவரும், இலங்கையிலுள்ள காயலர்களுக்கு அரசாங்கம் வழியாகத் தேவைப்பட்ட சேவைகள் பலவற்றைப் பெற்றளித்தவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை முஸ்லிம் கலாச்சார ராஜாங்கத் துறையின் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று இலங்கையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றியதோடு, ‘மஸ்னவீ’ ஆன்மிக நூலின் தமிழாக்கத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
[படம்: கோப்பு]
தகவல் & படங்கள்:
இலங்கை – கொழும்புவிலிருந்து...
O.L.M.ஆரிஃப்
|