காயல்பட்டினத்தில் 31.08.2017. வியாழக்கிழமை 22.30 மணிக்குத் துவங்கி, இன்று நள்ளிரவு முழுக்க இதமழை பெய்தது.
நேற்று (31.08.2017. வெள்ளிக்கிழமை) மாலை வேளையில் காற்று இல்லாமல் மிகுந்த வெட்கை நிலவியது. வழமைக்கு மாறான இந்த வெட்கை வானிலையைக் கண்ணுற்ற பட்டறிவாளர்கள், இது மழை பெய்வதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறினர். அதன்படியே மழையும் பெய்தது.
தொடர் இடி, மின்னல் இருந்த நிலையில் – குடிமக்கள் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை என்றாலும், இந்தளவுக்கேனும் பெய்துள்ள மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் சிறிதளவு மழை நீர் தேங்கி இருந்தது.
இன்று 08.00 மணி நிலவரப்படி, நகரில் இதமான வானிலை நிலவுகிறது. தாங்குமளவில் வெயில் ஒளிர்கிறது.
|