நடப்பாண்டின் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் 01.09.2017. வெள்ளிக்கிழமை என அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்களின் சார்பில், அன்று 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்தினார்.
பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், நிர்வாகிகளான எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எம்.ஐ.மெஹர் அலீ, எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48) உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொழுகை & குத்பா உரை நிறைவுற்றதும் அவர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 80,044 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 77,350 தொகையும் என - மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 57 ஆயிரத்து 794 ரூபாய் தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து இரண்டு தங்க மோதிரங்கள் நன்கொடையாகப் பெறப்பட்டது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
‘துணி’ M.A.அன்ஸாரீ
தகவல் உதவி:
M.T.ஹபீப்
[கூடுதல் தகவல்கள் & படங்கள் இணைக்கப்பட்டன @ 15:22 / 06.09.2017.] |