சஊதி அரபிய்யாவில் 01.09.2017. வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் ரியாதில், ஃபத்ஹா அருகிலுள்ள பொருட்காட்சிப் பூங்கா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் காயலர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் – தம்மாம், அல்கஸீம், உனைஸா வாழ் காயலர்களும் தொழுகையில் பங்கேற்றனர்.
நிறைவில் அனைவரும், கட்டித் தழுவி – கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சி – வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, அரட்டையில் மூழ்கினர்.
பின்னர், ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின், எம்.என்.அஹ்மத் ஸாலிஹ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற காலை பெருநாள் விருந்தில் காயலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி இடியாப்பம், வட்டிலியாப்பாம், சவ்வரிசி கஞ்சி, கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நண்பகல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, அனைவருக்கும் சுவையான மட்டன் பிரியாணி மதிய உணவாக வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
சஊதி அரபிய்யா - ரியாதிலிருந்து...
ராவன்னா மீரா நெய்னா
|