நிகழாண்டு ஹஜ் பெருநாளுக்காக கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தியும் அல்லது விடுமுறை எடுத்தும் - பல்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் பணிபுரியும் காயலர்கள் பெருமளவில் ஊர் வந்திருந்தனர். இதன் காரணமாக, 01.09.2017. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது இடநெருக்கடி காணப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் வழமையாக கீழ் தளம் முழுவதும் நிறைந்து, மேல் தளத்தில் முக்கால் பகுதியும் நிறைந்திருக்கும். ஆனால், அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் இரு தளங்களிலும் மக்கள் நிறைந்து, வெளிப்பள்ளியிலும் நிறைந்து, பள்ளியையொட்டிய சாலையிலும் 2 வரிசைகள் வரை நின்று தொழுதனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளியிலும் வழமைக்கு மாற்றமாக அன்று இரு தளங்களும் முழுமையாக நிறைந்து காணப்பட்டன.
கள உதவி:
B.A.நூஹுத்தம்பி
|