கத்தர் நாட்டில் 01.09.2017. வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் தோஹாவின் Umm Al Saneem அருகிலுள்ள பெரிய பள்ளிவாசலில், அன்று 05.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதில் காயலர்கள் பலர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவுற்றதும் அவர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர், காயலர் மஹ்மூத் ஹஸன் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் காலை விருந்தில் அனைத்து காயலர்களும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி இடியாப்பம், வட்டிலியாப்பம், கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நண்பகல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து அனைவருக்கும் சுவையான மட்டன் பிரியாணி மதிய உணவாகப் பரிமாறப்பட்டது.
சிறிய ஓய்வுக்குப் பின், கத்தர் நாட்டிலுள்ள Souq Waqif, City Centre ஆகிய இடங்களுக்கு காயலர்கள் சிற்றுலா சென்று வந்தனர்.
தகவல் & படங்கள்:
கத்தர் - தோஹாவிலிருந்து...
A.H.முஹம்மத் ஸிராஜுத்தீன்
|