மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு, மத்திய அரசால் விதியாக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் மாணவரணியான சமூகநீதி மாணவர் இயக்கம் – காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
மனித சங்கிலியாக நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தின்போது, அனிதா என்ற மாணவியின் தற்கொலைக்குக் காரணமானோரைக் கண்டித்துமத், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் பொதுமக்களின் ஆதரவுக் கைச்சான்றுகள் பெறப்படுகிறது.
இதில், திமுக, விசிக, இ.யூ.முஸ்லிம் லீக், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
தகவல் & படம்:
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின் |