காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் 10 இடங்களில் நீண்டகால பலன் தரும் மரங்கள் இலவசமாக நட்டுத் தரப்படும் என தமிழக அரசு வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு அரசு வனத்துறையின் அறிவிப்பு
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் (TBGP) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத், மூக்குப்பீறி, அங்கமங்கலம், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, கேம்பலாபாத், தெற்கு காயல்பட்டினம், நாலுமாவடி, படுக்கப்பத்து, மணப்பாடு ஆகிய 10 கிராமங்களைத் தத்தெடுத்து, நீண்ட காலத்தில் பலன் தரக்கூடிய மர வகை செடிகளை (தேக்கு, குமிழ்தேக்கு, ஈட்டி.) இலவசமாக நடவு செய்து தரப்படவுள்ளது.
மேலும் இரண்டாண்டுகள் கழித்து, உயிர்ச் செடிகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை (போனஸ்) வழங்கப்படவுள்ளது என்பதனை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வனவியல் விரிவாக்க அலுவலர் - தூத்துக்குடி தெரிவித்துள்ளார்.
இந்த அரிய வாய்ப்பை விருப்பமுள்ள - ஆர்வமுள்ள விவசாயிகள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
வனவியல் விரிவாக்க அலுவலர், தூத்துக்குடி
0461 – 2340244
மற்றும்
அலைபேசி எண் வனச்சரக அலுவலர்
94438 07276, வனவர்
80727 19025
மற்றும்
தன்னார்வ அமைப்பு
90943 54419
வாயிலாகவும் தொடர்புகொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|