மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு, மத்திய அரசால் விதியாக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் மாணவரணியான சமூகநீதி மாணவர் இயக்கம் – காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 06.09.2017. புதன்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், மனித சங்கிலி போராட்டம் & கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளித்தல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்றல், கல்விக்கான உரிமைகளை முழுமையாக மாநில அரசுகளின் கைகளில் ஒப்படைத்தல் – ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில்,
தமுமுக, திமுக, விசிக, இ.யூ.முஸ்லிம் லீக், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|