திருநெல்வேலி (நெல்லை)யில் நேற்று நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வீரர்கள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
திருநெல்வேலி விங்ஸ் பாட்மிண்டன் அகடமி சார்பில், பாட்மிண்டன் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பள்ளிகளுடன், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அணியும் பங்கேற்றது.
நேற்று நடைபெற்ற – 19 வயதுக்குட்பட்டோருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் – எல்.கே.மேனிலைப் பள்ளியின் இப்றாஹீம், ஸதக்கத்துல்லாஹ் மக்கீ ஆகிய வீரர்கள் வெற்றிவாய்ப்பை இழந்து, பள்ளிக்கு இரண்டாமிடத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இப்றாஹீம் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
வெற்றிபெற்ற இம்மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
தகவல்:
இஸ்மாஈல்
(உடற்கல்வி ஆசிரியர் – எல்.கே.மேனிலைப் பள்ளி)
|