இக்லாஸ் அறக்கட்டளை – ஐ.ஏ.எஸ். அகடமி, நெல்லை மாவட்ட முஸ்லிம் மருத்துவர்கள் நல கூட்டமைப்பு ஆகியன இணைந்து, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், அரசுப் போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, 10.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணியளவில் நடைபெற்றது.
UPSC (IAS / IPS / IFS / IRS), TNPSC உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியைப் பற்றி இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வுரையாற்றப்பட்டது. இதில் மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஹாஃபிழ் அப்துல்லாஹ் கிராஅத் ஓதினார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம் வரவேற்றார். டாக்டர் மாலிக், ஆகியோர் அறிமுகவுரையாற்றினர். எல்.கே.மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், டாக்டர் இத்ரீஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
டாக்டர் முஹம்மத் இப்றாஹீம், திரை விளக்கத்துடன் சிறப்புரையாற்றினார்.
அனஸ் பீரப்பா நன்றி கூறினார். இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிறைவில் மாணவர்களுடன் நிகழ்ச்சியை வழிநடத்தியோர் கலந்துரையாடல் நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
|