கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி, தமிழ்நாடு ஈரோட்டில் இயங்கி வரும் தாவூதிய்யா அரபிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரபிக் கல்லூரிகளின் முதல்வரும், கர்நாடக மாநிலத்தின் ஷரீஅத் பேரவை தலைவரும், அகில இந்திய மில்லி கவுன்ஸில் ஆலோசகரும், அரபி – உர்தூ – ஃபார்ஸி மொழிகளில் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக நூல்களை எழுதியவரும், நாடறிந்த மார்க்க அறிஞரும், மார்க்கத் தீர்ப்பாளருமான மவ்லானா முஃப்தீ ஹாஃபிழ் காரீ அஷ்ரஃப் அலீ பாக்கவீ, 08.09.2017. வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 82.
அன்னாரின் ஜனாஸா, நேற்று (09.09.2017. சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நலடக்கத்தில், தமிழகம் உட்பட - இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் மார்க்க அறிஞர்களும், பொதுமக்களும் பல்லாயிரக் கணக்கில் கலந்துகொண்டனர். அவரது ஜனாஸாவுக்கு கர்நாடக அரசின் சார்பில் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த பல்வேறு மார்க்க அறிஞர்கள் மறைந்த முஃப்தீ அஷ்ரஃப் அலீ பாக்கவீயின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
மவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல் ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ
|