காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகளை – பரிசோதகரை நியமித்துக் கண்காணிப்பதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள், காயல்பட்டினம் வழியாக செல்வதை உறுதி செய்ய - கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக, நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திடம் (RTO) நடப்பது என்ன? குழுமம் மனு வழங்கியிருந்தது. அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வினவப்பட்ட கேள்விக்கு - அவ்வலுவலகம் மூலம் பதில் பெறப்பட்டுள்ளது.
அதில் -
TNSTC திருச்செந்தூர் மூலமாக CHECKER நியமித்து வாகன இயக்கம் கண்காணிக்கப்படுகிறது என்றும், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் இயங்காத வாகனங்களுக்கு CASE REPORT வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாகன இயக்கம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்
மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை - 1, திருச்செந்தூர் தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 8, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|