தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மூலம், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) டாக்டர்.மூ.வீரப்பன் அவர்கள் தலைமையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (5.9.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) டாக்டர்.மூ.வீரப்பன் அவர்கள் அலுவலர்களுடன் ஆலோசனைக் மேற்கொண்டு தெரிவிக்கையில்:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினா; மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எல்லா வித புயல், வௌ;ளம் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் ரப்பர் போட்கள், லைப் ஜாக்கெட், லைப் பையாஸ், ரப்பர் டிங்கிசிஸ், படகுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதோடு அக்கருவிகளை பயன்படுத்துவது குறித்த ஒத்திகை பயிற்சியினை வட்டார வாரியாக நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.
வருவாய்த்துறையை பொறுத்த வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1.10.2006 முதல் 24 மணிநேரமும் இயங்கும், வெள்ள கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு முறைப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் அவசர கால செயலாக்கத்தில் 24 மணிநேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கும், அனைத்து அலுவலர்களுக்கும் தெரியபடுத்திட வேண்டும்.
மேலும், கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் நிவாரண மையங்களை கண்டறிந்து அந்த மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்வதோடு கடந்த 5 ஆண்டுகளுக்கான மழை வெள்ளம் அளவு குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இயற்கை இன்னல்களின்போது சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் அளிப்பதுடன் நிவாரணப்பணி மேற்கொள்ள துணை அலுவலர்களை உடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிப்பகுதிகளில் மழை காலங்களில் அதிக அளவில் மழை நீர் தேங்கி இருக்கும் பகுதிகளின் பட்டியலை பராமரித்து அவ்விடங்களில் தண்ணீர் தேங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிறு பாசனக் குளங்கள், ஊரணிகள், ஏhpகள், கம்மாய்கள், திறந்த கிணறுகள் ஆகியவை கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதோடு, நீர் நிலைகளில் விரிசல் இருந்தால் அதனை உடனடியாக அடைக்க வேண்டும்.
மீன்வளத்துறையினர் வான்நிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து பெறப்படும் புயல் எச்சரிக்கைகளை கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தெரியப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் நீர் பாய்ச்சல் ஆதாரங்கள் மற்றும் நீர் நிலைகளில் வரும் பகுதிகள் மற்றும் நீர் வெளியே செல்லும் பகுதிகளை தூர்வார்வதோடு மணல் முட்டைகள் தேவை என கருதப்படும் இடங்களில் முன்னதாகவே மணல் முட்டைகளை இருப்பு வைத்து தேவைபடும் போது உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை முறையாக பராமரிப்பதோடு புல்டவுசர், ஜே.சி.பி, அறுவை இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் போதுமான அளவுகள் இருப்பு உள்ளதா என உறுதி செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வேளாண்மைத்துறையினர், நுகர்பொருள் வாணிபகழகத்தினர், மாவட்ட வழங்கல் அலுவலகத்தினர், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆகியோர் போதுமான அளவு உணவு தானியங்கள் மண்ணென்ணை, சாக்குப்பைகள், வேளாண் விதைகள் உட்பட அனைத்து பொருட்களும் இருப்பு வைக்க வேண்டும்.
மழைநீர் தேங்கும் அல்லது வெள்ளம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளிலுள்ள திருமணமண்டபங்கள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், சமூதாய கூடங்கள் ஆகியவற்றிலுள்ள சாவிகள் அந்தந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு நீர் ஏற்றும் தொட்டி அமைந்துள்ள இடங்களிலும், நீரேற்றும் பகுதிகளிலும் தேவையான அளவு பீளிசிங் பவுடர் மற்றும் குளோரின் பவுடர் உபயோகிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து தெரு விளக்கு கம்பங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து சேதமடைந்துள்ள கம்பங்களை உடன் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்வதோடு இரவு, பகல் என எந்த நேரமும் அவசர காலங்களில் மின் இணைப்புகளை துண்டித்திடவும். அவ்வாறு துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சரிசெய்து உடனடியாக மறு இணைப்பு கொடுத்திடும் வகையில் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
என மின்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேரிடர் காலங்களில் அனைத்து துறையினரும் இணைந்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) டாக்டர்.மூ.வீரப்பன் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் திரு.அல்பிஜாண்வர்க்கீஸ்,இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப்,இ.ஆ.ப., மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநா; திரு.வே.பிச்சை, மாவட்ட ஆட்சித்தலைவாpன் நோ;முக உதவியாளர் (பொது) திரு.மா.இராஜையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு.கணேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|