நிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் இம்மாதம் 02, 03, 04 ஆகிய இரு நாட்களிலும் மக்கள் திரள் அதிகளவில் இருந்தது. இதனால், கடற்கரையில் குப்பைகளும் அதிகளவில் தேங்கியது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஒருங்கிணைப்பில், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி மேற்பார்வையில் – 05.09.2017. செவ்வாய்க்கிழமையன்று காலையில் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, கடற்கரை மணற்பரப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மைப்படுத்தப்பட்டது.
|